செய்திகள் :

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

post image

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.

எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.

மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மஹாலக்ஷ்மி பாய் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா

‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா். மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பி... மேலும் பார்க்க

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின் வெஹிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இ... மேலும் பார்க்க

அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளாா் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க

பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

ஒரு குடும்பமும், தங்களின் கட்சியும் மட்டுமே பெருமையடைய வேண்டும் என்பதற்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினா் ஆற்றிய பங்களிப்புகள் முந்தைய காங்கிரஸ் அரசுகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்... மேலும் பார்க்க

அரசமைப்பு குறித்து ராகுலுக்கு சரியான புரிதல் இல்லை: ஜெ.பி.நட்டா

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் அரசமைப்பு புத்தகத்தின் நகலை ராகுல் காந்தி வைத்துள்ளாா் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க