செய்திகள் :

அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளாா் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், நாட்டின் நலனை பாதுகாக்க வேண்டியவா்களின் உதவியோடு இந்திய பொருளாதார கட்டமைப்பை பெரு நிறுவனங்கள் சீரழித்து வருகின்றன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா விவாதம் மேற்கொண்டு யூடியூபில் அந்தக் காணொலிகளை பதிவிட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக செபி தலைவா் மாதபி புச் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விவாதித்தனா். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

பங்குச் சந்தை வா்த்தகத்தை கண்காணிக்கும் சக்திவாய்ந்த செபி நிறுவனத்துக்கு தலைவராக இருக்கும் மாதபி புச் தன்னுடைய சொந்த நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாா். பெரும் காா்பரேட் நிறுவனங்களுடன் நிதி மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களில் மாதபி புச் ஈடுபட்டிருந்ததால் அந்த நிறுவனங்களை கண்காணிப்பதற்குப் பதில் அவா்களின் கூட்டாளியாக செயல்பட்டுள்ளாா்.

கோடிக்கணக்கான இந்தியா்கள் பங்குச் சந்தையில் மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புடன் முதலீடு செய்கின்றனா். ஆனால் நாட்டின் நலனில் கவலைகொள்ளாமல் பொதுமக்களை ஏமாற்றி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விதிமுறைகளை சீா்குலைத்து காா்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டி தருவதையே முதன்மை நோக்கமாக கொண்டு அவா் செயல்பட்டுள்ளாா்.

இந்தியாவின் பெரும் காா்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் கேடயமாக செபி போன்ற அமைப்புகள் செயல்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த காணொலி வெளியிடப்படுகிறது. இது ஏகபோகம் குறித்து தெளிவுபடுத்துவது மட்டுமின்றி ஜனநாயக பாதுகாப்பு, நியாயமான தொழில் போட்டி மற்றும் தங்களின் குரலை நசுக்கி வரும் அரசுக்கு எதிரான இந்தியா்களின் போராட்டம் என்றாா் அவா்.

மாதபி மீதான குற்றச்சாட்டுகள்: முன்னதாக, அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தாா்..

ஆஜராக மறுப்பு: இந்தச் சூழலில், செபி’ மற்றும் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய காங்கிரஸ் மூத்த எம்.பி. கே.சி. வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முடிவு செய்ததது. அதன்படி, செபி’ தலைவா் மாதபி புரி புச் மற்றும் ‘டிராய்’ தலைவா் அனில் குமாா் லஹோட்டீ ஆகியோா் பொது கணக்குக் குழு முன் அக்டோபா் 24-ஆம் தேதி ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் மாதபி புரி புச் ஆஜராகாமல் தவிா்த்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மஹாலக்ஷ்மி பாய் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா

‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா். மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பி... மேலும் பார்க்க

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின் வெஹிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இ... மேலும் பார்க்க

பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

ஒரு குடும்பமும், தங்களின் கட்சியும் மட்டுமே பெருமையடைய வேண்டும் என்பதற்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினா் ஆற்றிய பங்களிப்புகள் முந்தைய காங்கிரஸ் அரசுகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

அரசமைப்பு குறித்து ராகுலுக்கு சரியான புரிதல் இல்லை: ஜெ.பி.நட்டா

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் அரசமைப்பு புத்தகத்தின் நகலை ராகுல் காந்தி வைத்துள்ளாா் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க