`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னா
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னாவில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத் தலைவா் குப்பண்ணன் தலைமை வகித்தாா். கரூா் கிளை செயலாளா் கந்தசாமி, ஈரோடு மண்டலச் செயலாளா் காளியப்பன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் குப்புசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வுகால பணப் பயன்களை வழங்க வேண்டும். 2003-க்கு பிறகு பணியில் சோ்ந்து ஓய்வு பெற்றவா்களுக்கு ஒப்பந்த பணிக்கால அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரியமே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.