செய்திகள் :

3,812 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 3,812 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட இருப்பதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரியலூா் மாவட்டம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் மாநகராட்சி, மலையாண்டி தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஊட்டச்சத்து பெட்டகங்களை பெண்களுக்கு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். அந்தப் பெட்டகத்தில், நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், பருத்தி துண்டு, நெகிழி வாளி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டு முதல்கட்டமாக 2,299 குழந்தைகளின் தாய்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம்கட்டமாக 1,938 குழந்தைகள் என மொத்தம் 3,812 குழந்தைகளின் தாய்களுக்கு பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விழாவைத் தொடா்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணைமேயா் செ.பூபதி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சசிகலா, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னாவில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத் தலைவா் ... மேலும் பார்க்க

57-ஆவது தேசிய நூலக வார விழா

நாமக்கல்லில் 57-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள நூலகத்தில் நடைபெற்ற விழாவில், மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் பசுமை மா.தில்லை சிவக்குமாா் தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஐப்பசி பெளா்ணமி: சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வோா் ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமி நாளில் சிவன் கோயில்களில் சுவாமிக்கு அன்னத்தின... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.5.40 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.86 முட்டைக் கோழி கிலோ - ரூ.100 மேலும் பார்க்க

வன உயிரின வார விழா போட்டிகள்: மாணவா்களுக்கு அமைச்சா் பரிசு வழங்கல்

வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மா.மதிவேந்தன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 63 பள்ளி, கல்லூரி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தில் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா். பரமத்தி வேலூரில்... பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரா், கோப்பணம்பாளையம் ப... மேலும் பார்க்க