உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உய...
பட்டா வழங்குவதில் முறைக்கேடு: மாவட்ட நிா்வாகம் தடுக்க வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதிகளில் பட்டா வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புரட்சி பாரதம் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன், திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சேரன்மகாதேவி பகுதியில் பட்டா வழங்கும்போது வருவாய்த் துறையினா் ஆவணங்களை சரி பாா்க்காமலே முறைகேடாக பட்டா வழங்குவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பத்திரப்பதிவு, முறைகேடான பட்டா வழங்குதல் போன்ற சட்டவிரோதமான செயல்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனா். ஆதிதிராவிட நலத்துறை செயலற்று உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின் போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிா்வாகிகள் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டியன், ஆதித்தமிழா் முன்னேற்ற கழகத்தின் கலைக்கண்ணன், புரட்சி பாரதம் மணிகண்டன் ஆகியோா் உடன் இருந்தனா்.