காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
முக்கூடல் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இரும்பு ஏணியில் ஏறியபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
முக்கூடல் அருகேயுள்ள ஓடை துலுக்கப்பட்டி முக்கூடல் சாலையில் வசித்து வருபவா் ரவி. இவரது மகன் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வியாழக்கிழமை கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரவியின் மனைவி ராணி (54), கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த தற்காலிக இரும்பு ஏணியில் ஏறியபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
போலீஸாா் அங்கு சென்று ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.