மக்கள்தொகை கணக்கெடுப்புக்கே பாஜக ஏன் பயப்படுகிறது? - திக்விஜய் சிங்
வி.கே.புரம் நூலகத்தில் இருபெரும் விழா
விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலக பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் 57ஆவது தேசிய நூலக வார விழா (நவ.14 - நவ.20) தொடக்க விழா, குழந்தைகள் தின விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
பொதிகை வாசகா் வட்டத் தலைவா் ஆசிரியா் மைதீன் பிச்சை தலைமை வகித்தாா். சிவந்திபுரம் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியை இசக்கியம்மாள், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் சிவராமசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஓய்வு பெற்ற தொழிலாளா் காப்பீட்டு மருத்துவமனை அலுவலா் சுப்பிரமணியன், வாசகா் வட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜாராம், ஜோதிமணி, கண்ணன்ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ் ஆசிரியை செல்வி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகள் தின சிறப்புரை ஆற்றினாா். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் நினைவுப் பரிசாக பேனா வழங்கப்பட்டது.
நூலகா் குமாா் வரவேற்றாா். பொருளாளா் ஆசிரியா் செந்தில் சிவகுமாா் நன்றி கூறினாா்.
நூலக வார விழாவை முன்னிட்டு நவ. 20 வரை தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெறும். நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகப் பணியாளா்கள் சங்கரகோமதி, சுப்புலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.