செய்திகள் :

”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- மேடையில் அன்பில் மகேஸிடம் குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்!

post image

நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக கூட்டணி கட்சியான விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பெயரை போடாமல் புறக்கணிப்பதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டது. இதே போல் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சியை சேர்ந்த அந்த தொகுதியின் சி.பி.எம் எம்.எல்.ஏ நாகை மாலி பெயரை போடுவதில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக நாகையின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இது போல் புறக்கணிக்கப்படுவதாக விசிகவினர் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.

நாகையில் ஆளூர் ஷாநவாஸ்

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 71வது கூட்டுறவு வார விழா அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நாகை மாலி, "அரசு நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் ப்ளக்ஸ் போர்டுகளில் என் பெயரையும், ஷாநவாஸ் பெயரையும் போடாத காரணம் என்ன? நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் இது போல் நடப்பது தவறு" என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் மேடையில் இருக்கும் போதே இதை கூறியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், "அரசு நிகழ்ச்சிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி கூட்டணி கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான எங்களது பெயர்கள் விடுபட்டுவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் அதிகாரிகள் செய்யக்கூடிய சிறி தவறு எங்கே போய் முடிகிறது என்பதை பார்க்க வேண்டும். கடந்த வாரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது பெயர் இல்லை. அதை எடுத்து வைத்து சமூக வலைதளங்களில் சித்தரித்தனர். ஏற்கனவே இந்த கூட்டணியை எப்படியாவது உடைச்சிட முடியாதா, சிக்கலை ஏற்படுத்தி விட முடியாதானு வெளியே இருக்க கூடிய சக்திகள் கண்ணும், கருத்துமாக வேலை செய்கிறார்கள்.

நாகை நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ், ஆளூர் ஷாநவாஸ்

யாரோ ஒரு அதிகாரி செய்யும் பிழை திட்டமிட்டு அரசே இப்படி செய்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தான் திராவிட மாடலா, சமூக நீதியா என்கிற கேள்விகள் வருகிறது. அதிகாரி செய்யும் தவறால் தேவையில்லாமல் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. இது இனி நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். எம்.எல்.ஏ பெயர் என்பது மக்கள் பிரதி நிதியின் பெயர். எங்களுடைய பெயர் வர வேண்டும் என்பதால் இதை சொல்லவில்லை. இங்கு தெருவில் ஒரு போர்டு வைப்பதால் எங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைக்க போவதில்லை. அப்படி ஒரு வெளிச்சம் தேவையுமில்லை.

பெயர் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இதை சொல்லவில்லை. இதற்கு பின்னால் இருக்க கூடிய சுய மரியாதையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இது இந்த அரசுக்கே கெட்டபெயர் ஏற்படுகிறது. இது தேவையில்லால் வேறு வகையில் எதிரொலிக்கிறது. இந்த விவகாரத்தை அரசுடன் முடிச்சு போடும் நிலைக்கு தள்ளுகிறீர்கள். இனி யார் பெயரும் விடுபடாமல் புரோட்டாக்கால் படி பெயர் போட வேண்டும்" என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காது. நான் இருக்கும் வரை உங்களுக்கு உரிய மரியாதையை நான் கொடுப்பேன்" என்றார்.

மகாராஷ்டிரா தேர்தல்: 'பால் தாக்கரேயின் கொள்கை வாரிசு யார்?' - மோதும் உத்தவ், ஷிண்டே; நிலவரம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டுள்ளார். இத்தேர்தல் இரண்டு சிவசேனாக்க... மேலும் பார்க்க

Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா லாங்கோரியா

ஹாலிவுட் நடிகை ஈவா லாங்கோரியா, தனது குடும்பம் இனி அமெரிக்காவில் வசிக்கப் போவதில்லை என்றும், அமெரிக்காவை `டிஸ்டோப்பியன் நாடு' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தன் குடும்பம், அமெரிக்காவின் தற்போதைய சமூக... மேலும் பார்க்க

கிண்டி: மருத்துவர் மீது புகார்களை அடுக்கும் விக்னேஷின் தாய் - மருத்துவச் சட்டம் என்ன சொல்கிறது?

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அங்கு புற்றுநோய் தலைமை மருத்துவரான பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே... மேலும் பார்க்க

அதிமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறதா திமுக? - குற்றச்சாட்டும் பின்னணியும்!

அ.தி.மு.க கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. `கலைஞர், ஜெ. ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்’த... மேலும் பார்க்க

ஒன் பை டூ

சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் ... மேலும் பார்க்க

EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் Udhayanidhi! | Elangovan Explains

பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற... மேலும் பார்க்க