செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: 'பால் தாக்கரேயின் கொள்கை வாரிசு யார்?' - மோதும் உத்தவ், ஷிண்டே; நிலவரம் என்ன?

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டுள்ளார். இத்தேர்தல் இரண்டு சிவசேனாக்களின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் உத்தவ் தாக்கரே தங்களுக்கு ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கிறார். இருவரும் பால் தாக்கரேயின் கொள்கை வாரிசுக்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே, இத்தேர்தல் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதியிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

ஏக்நாத் ஷிண்டே

அதேசமயம் மாநிலம் முழுவதும் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து 51 தொகுதியில் போட்டியிடுகின்றன. இதில் ஒர்லி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராஜ்ய சபை உறுப்பினர் மிலிந்த் தியோரா என்பவரை ஏக்நாத் ஷிண்டே நிறுத்தி இருக்கிறார். இதே போன்று தானேயில் உள்ள கோப்ரி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை எதிர்த்து உத்தவ் தாக்கரே தனது கட்சி சார்பாக கேதார் திகே என்பவரை நிறுத்தி இருக்கிறார். கேதார் திகே மறைந்த தானே சிவசேனா தலைவர் ஆனந்த் திகேயின் உறவினர் ஆவார். ஆனந்த் திகேதான் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அரசியல் குருவாவார்.

அவரை எதிர்த்து இப்போது ஆனந்த் திகேயின் உறவினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவசேனாவிற்கு மும்பை, தானே, பால்கர் பகுதியில்தான் அதிக செல்வாக்கு உண்டு. அங்கு இரண்டு சிவசேனாக்களும் ஒருவரை எதிர்த்து ஒருவர் 18 தொகுதியில் போட்டியிடுகின்றனர். பால்தாக்கரே கொள்கை, இந்துத்துவா கொள்கையை உத்தவ் தாக்கரே கைவிட்டுவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து பா.ஜ.க-வோடு இணைந்து ஆட்சியமைத்த பிறகு மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவின் துணையோடு ஏக்நாத் ஷிண்டே தனக்குக் கிடைத்திருக்கும் சிவசேனாவை தக்கவைத்துக்கொள்ளும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது நடந்து வரும் சட்டமன்றத் தேர்தல் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு வெறும் 40 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருந்த நிலையில், பா.ஜ.க அக்கட்சிக்கு 81 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் பெரும்பாலான தொகுதியில் தனது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் பிரசாரத்திற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

பால் தாக்கரேயின் மண்ணின் மைந்தர் கொள்கை, இந்துத்துவா கொள்கை, வளர்ச்சித்திட்டங்கள் ஆகிய மூன்றையும் முன்வைத்து ஏக்நாத் ஷிண்டே பிரசாரம் செய்து வருகிறார். அதோடு தங்களது அணிதான் பால்தாக்கரேயின் கொள்கை வாரிசு என்பதை முன்னிறுத்தும் வேலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஈடுபட்டுள்ளது. மற்றொரு புறம் தனது கட்சியைப் பறித்துக்கொண்டார்கள், துரோகம் செய்துவிட்டார்கள், இந்தத்துவாவைக் கைவிடவில்லை என்பது போன்ற வசனங்களைப் பேசி உத்தவ் தாக்கரே ஓட்டு சேகரித்து வருகிறார். இம்முறை உத்தவ் தாக்கரே அணியில் காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்திருக்கிறது. எனவே சிறுபான்மை வாக்குகள் மற்றும் காங்கிரஸ் வாக்குகளும் உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இரண்டு சிவசேனாக்களும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இரண்டு கட்சிகளும் 8 மற்றும் 9 தொகுதியில் வெற்றி பெற்றன.

பால்தாக்கரேயின் அரசியல் மற்றும் கொள்கை வாரிசுக்கு ஏக்நாத் ஷிண்டேயும், உத்தவ் தாக்கரேயும் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில், ராஜ்தாக்கரேயும் மும்பை முழுக்க 120 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். பால்தாக்கரேயின் சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பால் தாக்கரேயின் புகைப்படத்தை ராஜ்தாக்கரே பயன்படுத்தவில்லை என்றாலும், ராஜ்தாக்கரேயின் நடவடிக்கைகள் பால்தாக்கரேயின் நடவடிக்கைகளை ஒத்து இருக்கிறது. எனவே ராஜ்தாக்கரேயின் பொதுக்கூட்டம் என்றாலே கூட்டம் அலைமோதும்.

இதே போன்று சரத்பவாரும் தனது கட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறார். சரத்பவாரிடமிருந்து அவரது சகோதரர் மகன் அஜித்பவார் கடந்த ஆண்டு பிரிந்து சென்றதோடு மட்டுமல்லாது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் பிடுங்கிச்சென்றுவிட்டார். இத்தேர்தலில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, பா.ஜ.க கூட்டணியில் 59 தொகுதியில் போட்டியிடுகிறது. அதில் 35 தொகுதியில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் நேருக்கு நேராக எதிர்த்துப் போட்டியிடுகின்றன. பவார் குடும்பத்திலிருந்து இரண்டு பேரும் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளது. அதுவும் பாராமதி தொகுதியில் அஜித்பவாரை எதிர்த்து அவரது சகோதரர் மகனே போட்டியிடுகிறார்.

புனே, கோலாப்பூரில் தான் இரு அணிகளும் அதிகப்படியான தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் அனுமதித்து இருந்தாலும், சரத்பவார் அணிக்கு வேறு வகையான சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அஜித்பவார் கடிகாரம் சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க கடைசி வரை உச்ச நீதிமன்றத்தில் சரத்பவார் போராடினார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் அணி பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அதேசமயம் அஜித்பவார் கட்சியை உடைத்ததைக் கட்சி தொண்டர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மக்களவைத் தேர்தலில் தெரிய வந்தது.

அதே செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைக்கவேண்டும் என்பதில் சரத்பவார் தீவிரமாக இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அஜித்பவார் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது குறித்து சரத்பவார் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாட்டிடம் பேசியபோது, "சட்டமன்றத் தேர்தலில் எது உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தேர்தலுக்குப் பிறகு அஜித்பவார் அணி இருக்குமா என்பது சந்தேகம்தான்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- மேடையில் அன்பில் மகேஸிடம் குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்!

நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக கூட்டணி கட்சியான விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பெயரை போடாமல் புறக்கணிப்பதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டது. இதே போல் கீழ்வேளூர் ச... மேலும் பார்க்க

Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா லாங்கோரியா

ஹாலிவுட் நடிகை ஈவா லாங்கோரியா, தனது குடும்பம் இனி அமெரிக்காவில் வசிக்கப் போவதில்லை என்றும், அமெரிக்காவை `டிஸ்டோப்பியன் நாடு' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தன் குடும்பம், அமெரிக்காவின் தற்போதைய சமூக... மேலும் பார்க்க

கிண்டி: மருத்துவர் மீது புகார்களை அடுக்கும் விக்னேஷின் தாய் - மருத்துவச் சட்டம் என்ன சொல்கிறது?

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அங்கு புற்றுநோய் தலைமை மருத்துவரான பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே... மேலும் பார்க்க

அதிமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்கிறதா திமுக? - குற்றச்சாட்டும் பின்னணியும்!

அ.தி.மு.க கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. `கலைஞர், ஜெ. ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்’த... மேலும் பார்க்க

ஒன் பை டூ

சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் ... மேலும் பார்க்க

EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் Udhayanidhi! | Elangovan Explains

பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற... மேலும் பார்க்க