Viduthalai : வெற்றிமாறனின் 'விடுதலை 2' - அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சர்ய அப்...
தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! என்ன பிரச்னை?
நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் 3 பக்க கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.
விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாகியுள்ளது. அந்த விடியோவின் டடிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த திருமண நிகழ்வு விடியோ வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. தற்போது, நடிகை நயன்தாரா தனுஷ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.
இன்ஸ்டா பதிவில் நயன்தாரா கூறியதாவது:
எங்களது திருமண விடியோவில் நானும் ரௌடிதான் படத்தின் எந்த ஒரு பாடல்களையும் காட்சிகளையும் உபயோகிக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அதனால்தான் இவ்வளவுநாள் இந்தப் பட்ம் வெளியாக தாமதமானது.
தற்போது டிரைலரில் வெளியான 3 நொடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளீர்கள். இது மிகவும் தவறான செயலாகும். நீங்கள் மேடையில் அன்பு போல பேசுவதும் நேரிடையாக இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் இப்படியெல்லாம் செய்வீர்களா எனக் கூறியுள்ளார்.