Nayanthara: `உங்கள் கணவர் செய்தது எந்த வகையில் நியாயம்?' - இசையமைப்பாளர் எஸ்.எஸ்...
Mike Tyson: 'வல்லவனுக்கு வல்லவன் வரத் தான செய்வான்' - லெஜண்டின் லெகசியைக் கைப்பற்றிய சிறுவன்!
குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னன் யங் டைனமைட் என்றழைக்கப்படும் மைக் டைசனுக்கும், யூடியூபில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் மேல் பின்தொடர்பாளர்களை வைத்திருக்கும் இளம் தலைமுறை குத்துச்சண்டை நாயகன் ஜேக் பாலுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போட்டி எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், இன்று (நவம்பர் 16) நடந்தேறியுள்ளது. இப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டியானது இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் கோயிலுக்கும் பிரேசிலைச் சேர்ந்த வின்டெர்சன் நன்ஸ்க்கும் இடையே நடைபெற்றது. 6 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் கோயில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டம் மாரியோ பெராய்ஸ்க்கும் அபெல் ரமோஸ்க்கும் இடையே நடைபெற்றது . 12 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் யாருக்கும் வெற்றியில்லாமல் சமனில் முடிந்தது. பிறகு 10 சுற்றுகளைக் கொண்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கெய்ட்டி டெய்லரும் அமெனிடா செரிரானோவும் மோதினர். இதில் கெய்ட்டி டெய்லர் அமெனிடா செரிரானோவை வீழ்த்தினார்.
கடைசி போட்டியாக 70ஸ் கிட்ஸ்கள் முதல் 2கே கிட்ஸ்கள் வரை அனைத்து தலைமுறையினரும் எதிர்பார்த்த 58 வயது லெஜன்ட் மைக் டைசனுக்கும் 27 வயது பிரபலம் ஜேக் பாலுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. நுழைவாயிலிலிருந்து பகட்டாக காரில் வந்து ரிங்கை அடைந்தார் ஜேக் பால். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகப் பெரிய போட்டிகள் எதுவும் ஆடாமல் இருந்தாலும், தன்னுடைய கம்பீரம் சற்றும் குறையாமல் லப்பர் பந்து கெத்தைப் போல மக்களின் கரகோஷங்களுக்கிடையில் கெத்தாக நுழைந்தார் மைக் டைசன்.
8 சுற்றுகளைக் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் வயது முதிர்ச்சியின் காரணமாக டைசன் விளையாடுவதில் சிரமம் இருப்பது தெரிந்தது. ஆனாலும் அவர் பெரிதாகச் சோர்வுறவில்லை. நாக் அவுட் செய்வேன் என்று கூறிய ஜேக் பாலால் தன்னை விட இரண்டு மடங்கு அதிகமான மைக் டைசனை நாக் அவுட் செய்ய முடியவில்லை. 8 சுற்றுகள் முடிவில் அதிக குத்துகள் விட்ட ஜேக் பால் வெற்றி பெற்றார்.
போட்டி குறித்து பாலிடம் கேட்டபோது, மைக் டைசன் எப்போதும் லெஜன்ட் என்றும் அவர் எனக்கு முன்மாதிரி என்றும் அவருடன் போட்டியிட்டது மரியாதைக்குரிய விஷயம் என்றும் கூறினார். போட்டி குறித்து டைசனிடம் கேட்ட போது, நான் இதற்கு முன்பே தாயாராகி இருந்தேன் என்றும், பால் நன்றாகவே விளையாடியதாகவும் கூறினார். மேலும் தொகுப்பாளர், "இதுதான் உங்களுடைய கடைசி போட்டியா?" என்று கேட்டதற்கு, நான் அப்படி நினைக்கவில்லை என்று கூறினார்.
"அடுத்த போட்டியில் யாருடன் விளையாட ஆசைப்படுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "ஜேக் பாலின் தம்பி லோகன் பாலுடன் விளையாட ஆசைப்படுகிறேன்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...