2-வது டி20: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!
வாழு, வாழ விடு..! தனுஷ் நோட்டீஸை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு!
நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “வாழு, வாழ விடு. ஓம் நமச்சிவாய. இவ்வளவு நாள் எல்லவற்றையும் நம்பியிருக்கும் அப்பாவியான ரசிகர்களுக்கு இதைச் சொல்கிறோம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் இன்பத்தை காணுமாறு மக்கள் மாறவேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் இதில் நடிகர் தனுஷ் பேசும் விடியோவுடன் தனுஷ் அனுப்பிய நோட்டீஸையும் வெளியிட்டுள்ளார்.