செய்திகள் :

`அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல; என்மீது எந்த வழக்கும் இல்லை!' - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

post image

லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மூன்று நாள்களாக சோதனை நடத்திவந்த அமலாக்கத்துறை, சென்னையில் அவரின் மருமகனும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வந்தனர். நேற்று மாலை ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்த நிலையில், இந்தச் சோதனை தொடர்பாக ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருக்கும் விளக்கத்தில், ``எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாள்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல, அமலாக்கத்துறையின் சோதனை ஆணை (SEARCH ORDER) எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதையும் ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அந்தவகையில், இச்சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

இந்த சோதனை குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள், அதிகார வர்க்கத்திற்கு விலைபோனவர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பரப்பப்பட்டு வருகிறது. அரசியல் அறிவியல் மாணவனாக பதினைந்து வயதிலே சமத்துவ சித்தாந்த கருத்தியலில் பயணிக்கத் துவங்கியவன் நான். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் யுத்த களத்தில், தேர்தல் வியூக வகுப்பாளராக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காகவும், மக்களுக்கான அரசை உருவாக்கவும் களப்பணியாற்றியுள்ளேன். அந்த பயணத்தின் நீட்சியாக இப்போது நேரடி அரசியலிலும் களமிறங்கியுள்ள எனக்கு இது போன்றவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்திற்குத் தடையாக மாறாது.

ஆதவ் அர்ஜுனா

“என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.” புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழியில் மத பெரும்பான்மைவாதம், சாதிய ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் உள்ளிட்டவற்றிற்கான எனது பிரசாரப் பயணத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தேர்தல் அரசியலில் பேரறிஞர் அண்ணா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் கொண்ட கொள்கைகளில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றதை போல புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம்." என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதிகளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் இந்தியர்கள்! - அறிக்கை சொல்வதென்ன?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை தொடர்கிறார்கள். அதிலும் பெரும்பாலான நபர்களின் முதன்மை தேர்வாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற பணக்கார நாடுகள் உள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு ... மேலும் பார்க்க

'ரூ.2,300 கோடி; காலணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டீர்களே?' - அண்ணாமலை விமர்சனமும் திமுக ரியாக்சனும்

கடந்த ஆண்டு மார்ச்சில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ தயாரிக்கும் ஆலையை நிறுவ முன் வந்ததாக தெர... மேலும் பார்க்க

`கண்ணியத்துடன் பேச வேண்டும்’ - சி.வி. சண்முகத்துக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்... பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023-ம் ஆண்டு, அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம், ``உங்களது பணம் மற்றும் தால... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: 'பால் தாக்கரேயின் கொள்கை வாரிசு யார்?' - மோதும் உத்தவ், ஷிண்டே; நிலவரம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டுள்ளார். இத்தேர்தல் இரண்டு சிவசேனாக்க... மேலும் பார்க்க

”எங்களை புறக்கணிக்கிறார்கள்”- மேடையில் அன்பில் மகேஸிடம் குமுறிய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்!

நாகப்பட்டினத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திமுக கூட்டணி கட்சியான விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பெயரை போடாமல் புறக்கணிப்பதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டது. இதே போல் கீழ்வேளூர் ச... மேலும் பார்க்க