செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: வாகனத்தில் இருந்து ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்

post image

தாணே மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலர் உடையில் சைபர் செல்லுக்கே விடியோ கால்! பிறகென்ன? வைரலானது விடியோ

இந்த நிலையில் தாணே மாவட்டத்தில் உள்ள கல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவினர் சனிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 10 லட்சத்துக்கு மேல் இது இருந்ததால், இந்த விவகாரம் மேலும் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டது என்று தேர்தல் அதிகாரி விஸ்வாஸ் குஜார் தெரிவித்தார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

பாபா சித்திக் கொலை வழக்கில் 24-வது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து... மேலும் பார்க்க

வீட்டை பெங்களூருக்கு மாற்றினால்.. சமூக வலைதளத்தை இரண்டாக்கிய ஸ்ரீதர் வேம்பு பதிவு

பெங்களூருவை உங்கள் வீடாக மாற்றிக்கொண்டால், கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளைகளும் கன்னடம் கற்க வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவால், சமூக வலைதளமே இரண்டாகிக் கிடக்கிறது.பொதுவா... மேலும் பார்க்க

ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு: காங்கிரஸ் கருத்தும் துணை முதல்வர் பதிலும்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில், நேரிட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான நிலையில், அங்கு வந்த தனக்கு விஐபி வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர... மேலும் பார்க்க

உ.பி. மருத்துவமனை தீ விபத்து: குழந்தைகளைப் பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் பிழைத்த குழந்தைகளை அதன் பெ... மேலும் பார்க்க

ராகுல், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என பொய்களைப் பரப்பும் மோடி: பிரியங்கா

இடஒதுக்கீடுக்கு ராகுல் காந்தி எதிரானவர் எனப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பொய்களைப் பரப்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகர்... மேலும் பார்க்க

சந்திரபாபு நாயுடு சகோதரர் ராமமூர்த்தி நாயுடு காலமானார்!

சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பால் காலமானார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவுக்கு (72) உடல்நிலை சரியில்லாததால், 3 நாள்களுக்கு முன்னர் ச... மேலும் பார்க்க