பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது
பாபா சித்திக் கொலை வழக்கில் 24-வது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஸ்னோய் குழுவினர் பொறுப்பேற்ற நிலையில், கொலைக்கு காரணமான 23 பேரை இதுவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் 24-வது நபராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ்தீப் கராஜ்சிங் கில்லை மகாராஷ்டிர போலீஸாருடன் இணைந்து பஞ்சாப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்திய இளைஞர்!
மேலும் விசாரணைக்காக மும்பை போலீஸாரிடம் ஆகாஷ்தீப் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கூட்டாளி என்பதும், பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்குத் தளவாட உதவிகளை வழங்கியவர் என்பதும் போலீஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.