மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு!
மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால் அங்கும் மீண்டு பதற்றம் நிலவுகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் காயமடைந்தனா். அதே மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 போ் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டனா்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட 6 பேரும் 5 நாட்களுக்கு பிறகு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை ஜிரி ஆற்றின் அருகே மூன்று உடல்களும், சனிக்கிழமையன்று மேலும் மூன்று உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது மணிப்பூரில் மேலும் பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
காஸா போர்: 43,799 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் வீடுகளில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டது. வன்முறை செயல்களில் ஈடுபட முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.