559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!
கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேலி கார்ப்பரேஷன்.
மேற்கு வங்கத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷனின் வரவிருக்கும் துர்காபூர் அனல் மின் நிலையத்திலிருந்து 359 மெகாவாட் மின்சாரமும் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள அதன் கோடெர்மா அனல் மின் நிலையத்திலிருந்து 200 மெகாவாட் மின்சாரமும் வழங்க மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்து குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விழாவில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் தலைவர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் இரு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாமோதர் வேலி கார்ப்பரேஷனின் நாடு தழுவிய பயனாளிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் இரண்டு நாள் நிகழ்வான நுகர்வோர் சந்திப்பு 2024 இன் போது இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.