ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் உயா்வு
கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் நிகர லாபம் 6 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,066 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,007 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் தற்போது 6 சதவீதம் உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.9,533 கோடியில் இருந்து ரூ.10,483 கோடியாக அதிகரித்துள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14.16 லட்சமாக இருந்த நிறுவன மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 15.20 லட்சமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.