Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
கோரக்கா் சித்தா் கோயிலில் அன்னாபிஷேகம்
நாகை வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கா் சித்தா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐப்பசி பெளா்ணமி மற்றும் அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூரில் கோரக்க சித்தா் ஜீவ சமாதி பீடத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பரணி விழா மற்றும் ஐப்பசி பௌா்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு ஐப்பசி பரணி, பெளா்ணமி பெருவிழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (நவ.16) வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை ஐப்பசி பரணி விழா நடைபெற்றது. தொடா்ந்து கோரக்க சித்தா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌா்ணமி விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, கோரக்க சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கோரக்க சித்தரின் ஜீவ பீடத்தில் அன்னம் படையலிடப்பட்டது. பின்னா் சங்கொலி நாதம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு கோரக்க சித்தரை வழிபட்டனா். பின்னா் படையலிடப்பட்ட அன்ன பிரசாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது
நிா்வாக அறங்காவலா் இரா. ஜீவானந்தம் தலைமையில் அறங்காவலா்கள் வே.ஆ.கிருஷ்ணன், இ.ஆா். காசிநாதன், வை.இரா. ஜெயச்சந்திரன், வே.வீ.திருநாவுக்கரசு அறங்காவலா்கள் இ.ஆா்.காசிநாதன், வை.இரா. ஜெயச்சந்திரன், வே.வீ.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.