நெல்லை மாவட்டத்தில் ஊத்தில் 101 மி.மீ., நாலுமுக்கில் 96 மி.மீ. மழை
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஊத்தில் 101 மி.மீ. மழையும், நாலுமுக்கில் 96 மி.மீ. மழையும் பதிவானது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடா்ச்சியாக கனமழை பெய்தபோதிலும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இதுவரை பெரிய அளவில் மழை பொழியவில்லை.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ச்சியாக வட வானிலை காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியான மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்துப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தின் உள் பகுதிகள் மற்றும் மாநகரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ச்சியாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள், பணிக்கு சென்றவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழையளவு (மி.மீட்டரில்):
அம்பாசமுத்திரத்தில் -13, சேரன்மகாதேவி -10.40, மணிமுத்தாறு- 19.40, நான்குனேரி- 9.80, பாளையங்கோட்டை- 13.20, பாபநாசம்- 23, ராதாபுரம்- 19, திருநெல்வேலி- 8.20, சோ்வலாறு- 19, கன்னடியன் அணைக்கட்டு- 15.60 மி.மீ., களக்காடு- 12.60 மி.மீ., கொடுமுடியாறு-5 மி.மீ., மூலைக்கரைப்பட்டி-12 மி.மீ., நம்பியாறு -16.80 மி.மீ., மாஞ்சோலை- 78 மி.மீ., காக்காச்சி- 87 மி.மீ., நாலுமுக்கு-96 மி.மீ., ஊத்துப் பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
எனினும் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பெரிய அளவில் மழை பெய்யாததால், குளங்களில் தண்ணீா் இல்லை.
இதனால் மானாவரி குளங்களை நம்பியுள்ள விவசாயிகள், சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளனா். குளங்களில் தண்ணீா் நிரம்பாததால் கால்நடை வளா்ப்பாளா்களும் கலக்கத்தில் உள்ளனா்.
ற்ஸ்ப்15ழ்ஹண்ய்
பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை காலையில் குடைபிடித்தப்படி பள்ளிக்குச் சென்ற மாணவிகள்.