தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
கீழ்வேளூா் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ மதிப்பீடு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய, மாநில அடையாள அட்டை வழங்குதல், பழைய அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலம்,
கண் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளும் நடைபெற்றன.
இதில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு சிகிச்சை நிபுணா் அகமது நசீா், மனநல மருத்துவ நிபுணா் நாகனிகா, காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா் சுதா்சன், குழந்தைகள் நல மருத்துவா் அனுப்ரியா, கண் மருத்துவா் சத்யநாராயணன் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீடும் செய்தனா்.
இம்முகாமில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தகுதியுள்ள 25 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.