செய்திகள் :

அரசுப் பேருந்தில் இளைஞா் வெட்டிக்கொலை: 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் போலீசில் சரண்

post image

திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை அடித்து கீழே தள்ளி விட்டுள்ளாா். பின்னா் 5 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனா். இதில் பலத்த காயமடைந்து விஷ்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற ஜீயபுரம் போலீஸாா் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பிச் சென்றவா்களை தேடி வந்தனா்.

போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்னா், ஏற்பட்ட தகராறில் கோகுல் என்ற நபா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் விஷ்ணுவுக்கும் தொடா்பிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. விஷ்ணு சமீபத்தில் தான் ஜாமினில் வந்துள்ளார்.

இதையும் படிக்க |சரக்கு ஆட்டோ - லாரி மோதல்! 3 இளைஞர்கள் பலி!

இந்த நிலையில்,விஷ்ணுவை நோட்டமிட்ட கும்பல் தான் வெள்ளிக்கிழமை பழிக்குப்பழியாகவே இந்த கொலையை செய்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ்(23), அவரது 17 வயது சகோதரர் ஒருவர், மணிமாறன்(22), 17 வயதுடைய 2 பேர் என மொத்தம் 5 பேர் தான் இந்த கொலை சம்பவத்தை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் சனிக்கிழமை காலை மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.75 லட்சம் நில மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். இவர் தனது அண்ணன... மேலும் பார்க்க

சென்னானூர் தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய பத்திரிகை நாளையொட்டி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை, ஊடகத்தில் பணியாற்றுபவர... மேலும் பார்க்க

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ஆத்தூர், சேலம், நாமக்கல் என தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் ஐயப்ப பக்தா்கள் சனிக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு உகந்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 120336 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7084 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106. 11 அடியிலிருந்து 106.19அடியாக உயர்ந்துள்ளது.காவிர... மேலும் பார்க்க

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா(41)உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் (நவ.15) உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபா... மேலும் பார்க்க