செய்திகள் :

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மாவட்ட ரிசர் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, மறைவான பகுதியிலிருந்து நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!

பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 197 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் கான்கெர் மற்றும் நாரயண்பூர் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. இங்கு, பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு: காங்கிரஸ் கருத்தும் துணை முதல்வர் பதிலும்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில், நேரிட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான நிலையில், அங்கு வந்த தனக்கு விஐபி வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: வாகனத்தில் இருந்து ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்

தாணே மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அ... மேலும் பார்க்க

உ.பி. மருத்துவமனை தீ விபத்து: குழந்தைகளைப் பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் பிழைத்த குழந்தைகளை அதன் பெ... மேலும் பார்க்க

ராகுல், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என பொய்களைப் பரப்பும் மோடி: பிரியங்கா

இடஒதுக்கீடுக்கு ராகுல் காந்தி எதிரானவர் எனப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பொய்களைப் பரப்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகர்... மேலும் பார்க்க

சந்திரபாபு நாயுடு சகோதரர் ராமமூர்த்தி நாயுடு காலமானார்!

சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பால் காலமானார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவுக்கு (72) உடல்நிலை சரியில்லாததால், 3 நாள்களுக்கு முன்னர் ச... மேலும் பார்க்க

காவலர் உடையில் சைபர் செல்லுக்கே விடியோ கால்! பிறகென்ன? வைரலானது விடியோ

காவல்துறை உடையில் இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த நபர், செல்போனில் விடியோ காலில் ஒருவரை அழைத்து அவரை தனது வலையில் வீழ்த்த நினைத்திருந்தார். ஆனால் போனை எடுத்ததே ஒரு போலீஸ் ஆகி, மோசடியாளருக்கு விரிக்கப்ப... மேலும் பார்க்க