செய்திகள் :

``வைகை ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுகள்; அதிகரிக்கும் நீர் மாசுபாடு'' - எச்சரிக்கும் சூழல் ஆய்வு!

post image

வைகை ஆற்றில் 10 நாள்கள் ஆய்வு..

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு வைகை ஆற்றின் பல்லுயிரிகள், பண்பாட்டுச் சின்னங்கள், கழிவுநீர் கலப்பிடங்கள் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

வைகை ஆற்றின் தாவர மற்றும் பல்லுயிரிய சூழலின் நிலை, நகரமய விரிவாக்கம் வைகை ஆற்றின் மீது ஏற்படுத்திய தாக்கம், வைகை ஆற்றின் மணல் பரப்பின் நிலை, அதில் கலக்கும் கழிவு நீர், வைகை ஆற்றின் நீரின் தன்மை மற்றும் தரம் உள்ளிட்டவைகளை இந்த ஆய்வில் நாம் காணலாம்.

வைகை ஆற்றில் `இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை' ஆய்வு

57 வகையான தாவரங்கள்..

இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் சூழலியல் ஆய்வாளர் ஆன தமிழ் தாசன் கூறியதாவது: "என்னுடன் சேர்ந்து நால்வர் கொண்ட குழு இந்த வைகை ஆற்றின் சூழல் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்தோம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் வைகை ஆற்றினுடைய பல தகவல்களை அறிந்தோம். மூல வைகையின் அடர்ந்த வனப்பகுதியில் ஆற்று நீர் நாய்கள் வாழுகின்றன. மேலும் மான்கள், கீரிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வைகை ஆற்றை வாழிடமாகவோ கொண்டுள்ளன என்பதை ஆவணம் செய்துள்ளோம். வைகை ஆற்றங்கரையில் 57 வகையான தாவரங்களை ஆவணம் செய்தோம். அதில் 45 வகை மரங்கள் 6 வகை செடிகள் 3 வகை குடிகள் 4 வகை பொருள்கள் 2 வகை நீர் தாவரங்கள் 4 வகை காட்டு தாவரங்கள் அடங்கும்.

நீர் மாசுபாடு அதிகரிப்பு..!

மரங்கள் சூழ்ந்த வைகை ஆற்றங்கரை இன்று வெட்ட வெளியாக குடியிருப்புகளாக பாசன பரப்புகளாக மாறிவிட்டன. மதுரை மாநகரில் வைகையின் இரு கரையில் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் வைகை ஆற்றங்கரையில் மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் மட்டுமே காணப்படும் காருவி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. மாசுபட்ட நீரில் வளரக்கூடிய சம்பை புல்லும் ஆகாய தாமரை செடியும் பரவலாக மதுரை நகரில் காணப்படுகிறது. இத்தாவரங்களின் பரவல் மதுரை மாநகரில் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக விளங்குகின்றன.

நாமக்கோழி, அரிவாள் மூக்கன் அதிகரிப்பு..!

மேலும் வைகை ஆற்றில் 175 வகை பறவைகளை ஆவணம் செய்தோம். அதில் 125 வகை பறவைகள் வாழிட பறவைகள் ஆகும். 50 வகை வலசை பறவைகளும் ஆவணம் செய்துள்ளோம். கழிவுநீரில் உள்ள தாவரங்களை, புழுக்களை, பூச்சிகளை உண்டும் வாழும் இயல்புடைய நாமக்கோழி அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை மதுரை மாநகரில் பாயும் வைகை ஆற்றில் அதிகரித்து வருகின்றன. இவை ஆற்றின் நீரின் மாசுபாடு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். வைகை ஆற்றில் 58 வகையான நன்னீர் மீன்கள் ஆவணம் செய்துள்ளோம். அதில் 11 வகை மீன்கள் அயல்வகை மீன்கள் ஆகும்.

வைகை ஆற்றில் `இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை' ஆய்வு

ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவு..!

அதுமட்டுமின்றி மதுரை மாநகர் எங்கும் வைகை ஆற்றில் வெண் மணல் பரப்பு காண முடியவில்லை, மணல் குவாரிகள் மூலம் ஆற்று மணல் எடுக்கப்பட்டுவிட்டது.

தேனி மாவட்டம் வாலிப்பாறை முதல் ராம்நாடு மாவட்டம் ஆற்றங்கரை வரை சுமார் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகை ஆற்றுக்குள் கழிவு நேரடியாக கலப்பதை ஆவணம் செய்தோம். அதில் மதுரையில் 54 இடங்களில் இருந்து வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

குடிநீர், குளியல் நீர், கால்நடைக்கான குடிநீர், பல்லுயிரிகளுக்கான வாழ்வாதார நீர், சலவை நீர், பாசன நீர், நன்னீர் போன்ற பல பயன்பாடுகளை கொண்ட வைகை ஆற்று நீரின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். எனவே வைகை ஆற்றின் உயிர்ச்சூழல் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆறு சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.

``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த சில நாள்களாக பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். நேற்று மும்பை மற்றும் நவிமும்பை பகுதியில் நடந்த இரு தேர்தல் பிரசார கூட்டத... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழ... மேலும் பார்க்க

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் - நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks

இன்றைய ஜூவி பிரேக்ஸில்,வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்ந... மேலும் பார்க்க

Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் - பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது. டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் ... மேலும் பார்க்க

US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து - அமெரிக்கர் துளசிதான்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை 'F... மேலும் பார்க்க

இந்தியாவில் முதன்முறை: சிக்கும் ADMK முன்னாள் அமைச்சர்? | DMK | BJP | TVK VIJAY | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Intro: Children's day & Jawaharlal Nehru Birthday * லாட்டரி மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!* ஓ.பி.ஜி குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை... 8... மேலும் பார்க்க