விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன்
ரிஷப் பந்த்தை பார்த்து ஆஸி. வீரர்கள் பயப்படுகிறார்கள்..! ரவி சாஸ்திரி பேட்டி!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் பார்டர் - கவாஸ்கர் தொடர் வரும் நவ.22ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது.
2022ஆம் ஆண்டு ரூர்கியில் டிசம்பர் மாதம் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கினார் ரிஷப் பந்த்.
கடந்த முறை ஆஸி.க்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த சிறப்பாக செயல்பட்டார். கடந்த இரண்டு தொடர்களில் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த்தின் சராசரி 62. நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தாலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பந்த் குறித்து கூறியதாவது:
உண்மையாக சொல்ல வேண்டுமானால் ரிஷப் பந்த்தை விபத்துக்குப் பிறகு பார்த்திருந்தால் அவரிடம் சென்று நீங்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுங்கள் என நம்பிக்கையை கொடுத்திருக்க முடியாது.
நான் இதை மறக்க மாட்டேன். ரிஷப் மோசமாக இருந்தார். விபத்துக்குப் பிறகு ஒரு மாதம் சென்று கழித்து பார்த்தேன். உருக்குலைந்து, நொருங்கி, உடலின் பாகங்களில் காயங்களுடன் இருந்தார்.
எல்லா இடங்களிலும் தையல் போடப்பட்டுள்ளது. மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து சாதாரணமாக வந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது நம்பமுடியாத விஷயம்.
அங்கிருந்து டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் அணியில் பங்குபெறுவது மிகப்பெரிய சாதனை.
மருத்துவமனையில் நடக்கமுடியாமல் இருந்து தற்போது ஃபார்முடன் ஆஸி.க்கு திரும்பியுள்ளது ஆஸி. வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கிரிக்கெட் மீதான ஆர்வம் ரிஷப் பந்த்துக்கு இன்னமும் அதிகரித்துள்ளது. கடைசி சில மாதங்களாக கடினமாக உழைத்து டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளது எனக்கு தெரியும்.
ஸ்டார் ஸ்போர்டிஸில் ரிஷப் பந்த், “முதல்முறையாக என்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தேன். இந்த உலகத்துடனான என்னுடய காலம் முடிந்துவிட்டதென நினைத்தேன். கடவுள்தான் என்னை காப்பாற்றியிருக்க வேண்டும். மருத்துவர்கள்கூட இது வாழ்க்கையை மாற்றும் இந்த விபத்து குறித்து மருத்துவர்களும் மோசமாகவே கூறினார்கள். இது குணமடைய கிட்டதட்ட 16- 18 மாதங்கள் ஆகும் என்றார்கள். இந்தக் காலத்துக்கு 6 மாதங்கள் முன்னதாக நான் குணமடைவேன் என மருத்துவர்களிடம் கூறினேன்” என்றார். கூறியபடியே செய்தும் காட்டினார் ரிஷப் பந்த்.