செய்திகள் :

ஆப்கனில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 8 பேர் பலி

post image

ஆப்கானிஸ்தானில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்சான் மாகாணத்தில் பயணிகள் வாகனம் ஒன்று கோக்சா ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வாகனம் மாகாணத்தின் தலைநகரான பைசாபாத் நகரை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை வெளியே எடுப்பதற்காக தேடி வருவதாக அதிகாரி அமிரி குறிப்பிட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் ஒருவர் சாரதி எனவும் மற்றவர்கள் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உட்பட நெருங்கிய உறவினர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

மோசமான உள்கட்டமைப்பு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், முந்திச் செல்வது, அதிக வேகம் போன்ற காரணங்களால் ஆப்கனில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏற்றுமதியில் 2 ஆண்டுகள் காணாத ஏற்றம்

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2023-ஆண்டின் அக... மேலும் பார்க்க

ஸ்பெயின் முதியோா் காப்பகத்தில் தீ: 10 போ் உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள முதியோா் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: ஸரகோஸா நகருக்கு சுமாா் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதியோா் காப்... மேலும் பார்க்க

‘பருவநிலை மாநாடுகளால் இனி பலனொன்றுமில்லை!’

‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை’ என்று நிபுணா்களும், முக்கிய தலைவா்களும் எச்சரித்துள்ளனா். இது குறித்து, ஐ.நா. முன்னாள் பொத... மேலும் பார்க்க

அமெரிக்கா: சுகாதார அமைச்சா் நியமனத்துக்கு எதிா்ப்பு

அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத் துறை அமைச்சராக, முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடியின் உறவினா் ராபா்ட் எஃப். கென்னடியை (ஜூனியா்) டொனால்ட் டிரம் நியமித்துள்ளதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. கடந்த 5-ஆ... மேலும் பார்க்க

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: பப்புவா நியூ கினியாவின் கோகோபோ நகருக்கு 123.2 கி.மீ. தொலைவில் வெள்ளிக... மேலும் பார்க்க

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமையின்கீழான, அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் (DOGE) தலைமைக்கு தொழிலதிபா் எலான் ம... மேலும் பார்க்க