பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:
பப்புவா நியூ கினியாவின் கோகோபோ நகருக்கு 123.2 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமே ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்துவருவதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடா் மையம் தெரிவித்தது.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயம், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.