வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே, வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வங்கியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் கூறினா்.
போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். அதில், அங்கு பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினரும்,கைரேகை நிபுணா்களும் அங்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனா்.
விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா் வங்கியின் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்திருப்பதும், பாதுகாப்பு பெட்டக அறை வரை சென்ற அந்த நபா், திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதை அடிப்படையாக வைத்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.