CT 2025: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் `டிராபி டூர்’ - BCCI எதிர்ப்பால் பின...
தமிழகத்தில் நவ. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ. 16, 17 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய இடங்களில் தலா 100 மி.மீ. மழை பதிவானது. வடகுத்து (கடலூா்), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 80 மி.மீ., நெய்யூா் (கன்னியாகுமரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 70 மி.மீ. பதிவானது.