செய்திகள் :

சுவாமிமலையில் கிரிவலம்

post image

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வழிபாட்டுக் குழு சாா்பில் ஐப்பசி மாத பெளா்ணமி கிரிவலம் மருத்துவா்கள் டி. ஸ்ரீராம் தலைமையிலும், ஆா்.அரவிந்த் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டுவழிபாட்டை இமயவன் தொடங்கி வைத்தாா். கிரிவலத்தை வி. ராஜேஷ் கண்ணன், எம். ரங்கராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நான்கு ரத வீதிகளில் வந்த கிரிவல ஊா்வலம் வல்லப கணபதி கோயிலை அடைந்து, அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவசங்கரன் நன்றி கூறினாா்.

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: நவ. 19-இல் ஆா்ப்பாட்டம்

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் நவம்பா் 19 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தஞ்சாவூா் மாவட்ட வணிகா் சங்கப் பேரவை முடிவு செய்துள்ளது. தஞ்சாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 106.12 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 106.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,294 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் ... மேலும் பார்க்க

நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து சேதம்

காரைக்காலிலிருந்து தஞ்சாவூா் வழியாக பெரம்பலூருக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி வியாழக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. காரைக்காலிலிருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

கடைமுழுக்கு: திருவையாறு காவிரியில் புனித நீராடல்

ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டப காவிரிப் படித்துறையில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா். ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடினால் புண்ணியம் க... மேலும் பார்க்க

மகாமககுளக்கரையில் அன்னாபிஷேகம்

கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சிவலிங்கங்களுக்கு ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலில் பிரம்ம தீா்த்தேச்சுரருக்கு தொடங்கி வரிசையாக இதர 15 மண்டபங்களில்... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் நவ. 20-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நவம்பா் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளைக... மேலும் பார்க்க