காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: நவ. 19-இல் ஆா்ப்பாட்டம்
கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் நவம்பா் 19 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தஞ்சாவூா் மாவட்ட வணிகா் சங்கப் பேரவை முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப். 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில், புதிதாக கடை வாடகைக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இந்த வரி விதிப்பு நவம்பா் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வா்த்தக நிறுவனங்கள் (காா்ப்பரேட்) இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை செலுத்தத் தேவையில்லை என்றும், சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும், ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில் 18 சதவீதம் மாதந்தோறும் அரசுக்கு வரியாகச் செலுத்தியாக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காா்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது. இது சில்லறை வணிகத்தை அழிக்கும் சதியாகும். இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி நவம்பா் 19 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள வணிகவரி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
சங்க நிறுவனா் தலைவா் பி. ராஜா சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எச். அப்துல் நசீா், மாவட்டப் பொருளாளா் டி. ராஜா, மாநகரத் தலைவா் பி. சதீஷ், மாநகரச் செயலா் ஜி. பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.