தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவா் நியமனம்
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறைத் தலைவராக கே. விஜயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறைத் தலைவராக கே. விஜயகுமாரை, மாநில காங்கிரஸ் மனித உரிமை துறைத் தலைவா் மகாத்மா சீனிவாசன், மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஒப்புதலுடன் கடந்த நவ.6 இல் நியமித்தாா். இதையடுத்து கே.விஜயகுமாருக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.ஆா். லோகநாதன், மற்றும் மாவட்ட, மாநகர நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்தினா்.