செய்திகள் :

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

லாஃப்ரா யாழினி, பெண் ஐ.பி.எஸ், தனது க்வாலிஸ் மோட்டாரில், தினசரி ரோந்து சென்று கொண்டிருந்த பொழுது, அவள் மொபைல் அவளை அழைத்தது.

தேர்தல் நேரம்.

எல்லோரையும் தேர்தல் வேலைகள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பொழுது, குற்றப் பிரிவை தன் ஆள்மையில் கொண்டிருக்கும் லாஃப்ராவுக்கு வந்த மொபைல் அழைப்பு எச்சரிக்கை மணியாக அடித்தது.

”வெயில் 100 டிகிரியை தொட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் குளிர்சாதன ஆடம்பரத்தை தவிர்த்து, தேவையில்லாத ரோந்து வந்தது தவறோ?” லாஃப்ரா தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

மொபைலின் எதிர்பக்கம் இன்ஸ்பெக்டர் அபி.

“மேடம், ஒரு எமர்ஜன்சி”

லாஃப்ரா தனக்குள் நினைத்துக் கொண்டாள்,” இது என்ன, புது எமர்ஜென்சி. இப்பொழுது தான் பெண்கள் கடத்தலில் இருந்து வெளி வந்தோம். இப்போ என்ன அபி”

“மேடம், ரூபாவை காணோமாம்”

ரூபா உள்ளூர் அரசியல் தலைவரின் மகள். முன்னொரு முறை மைனர் பெண் ரூபா, இதே போல் காணாமல் போய், ஊடகங்களில் பெரிய விஷயமானது லாஃப்ராவின் நினைவுக்கு வந்தது.

ரூபா தன் சக மாணவனுடன் வீட்டில் இருந்து பைசா எடுத்துக் கொண்டு ஊட்டி போகும் வழியில் பாதி வழியில் மடக்கி மீட்டிருந்தனர்.

கடந்த முறை ரூபாவின் அப்பா காவல்துறையையே ஒரு கலக்கு கலக்கியிருந்தது நினைவுக்கு வந்து லாஃப்ராவின் அடி வயிற்றில் ஒரு பந்து போல் சுருண்டு பிடித்தது.

“அரசியல்வாதி. அதுவும் தேர்தல் நேரம். கமிஷனருக்கு தகவல் போயிடுச்சா?”

“அங்கே இருந்து தான் மேடம் நமக்கே தகவல் வந்தது”

“ரூபாவை கடைசியாக கண்ட இடம்?” லாஃப்ரா அபியை விசாரித்தாள்.

சித்தரிப்புப் படம்

”அவள் அபார்ட்மெண்ட்டில் மேடம். அவளுடைய தோழி, அவளை காண வந்த பொழுது, ரூபாவை காணாமல் அதிர்ந்து போயிருக்கிறாள். அது மட்டும் இல்லாமல், ரூபாவின் அப்பார்ட்மெண்ட்டே தலை கீழாய் புரட்டி போடப்பட்டிருக்கிறதாம்”

“அபி, இடத்துக்கு வந்து விடுங்கள். நானும் வந்து விடுகிறேன்” என்ற லாஃப்ரா, ஓட்டுநருக்கு ஆணையிட்டாள்,”வண்டியை வேகமாக விடுங்கள். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை  நோக்கி”

லாஃப்ராவின் க்வாலிஸ் கல்லூரி சாலை நோக்கி விரைந்தது.

லாஃப்ரா குறிப்பிட்ட இடத்தை அடைந்த பொழுது வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சிகப்பு நிற ராயல் என்ஃபில்ட் நின்று கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் அபி வந்தாகிவிட்டது.

ஒரு பெருமூச்சுடன் லாஃப்ரா க்வாலிஸ் விட்டு கீழே இறங்கினாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தூக்கம் மறக்க வேண்டி இருக்குமோ.

ரூபாவின் அப்பார்ட்மெண்ட் முதல் மாடியில் இருந்தது.

மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய ஹால் மற்றும் சமையலறை கொண்ட அப்பார்ட்மெண்ட்.

தான் ஐ.பி.எஸ் படித்த பொழுது தங்கி இருந்த விடுதி லாஃப்ரா மனத்திறையில் ஓடி மறைந்தது.

சித்தரிப்புப் படம்

க்வாலிஸில் இருந்து இறங்கிய லாஃப்ராவை இன்ஸ்பெக்டர் அபி எதிர்கொண்டாள்.

“ஃபோரன்சிக் டீம், அபி?”

“வந்து விட்டார்கள், மேடம்”

“வீட்டு வேலையாட்கள்?”

“இரண்டு பேர்.”

“இருவரும்…?”

கேள்வியை முடிக்காமல் விட்டாள் லாஃப்ரா.

“உக்கார வச்சுருக்கேன் மேடம்”

“கட்டிட பாதுகாவலர்கள்”

“இரண்டு ஷிஃப்ட் மேடம். இருவரும் பேருக்காகத் தான்”

“சிசிடிவி?”

“இருக்கு ஆனால் இன்னும் சோதிக்கல மேடம்”

இருவரும் பேசிக்கொண்டே ரூபாவின் அப்பார்ட்மெண்ட்டை  லிஃப்ட் மூலம் அடைந்திருந்தனர்.

லாஃப்ராவின் கொள்கை இது தான்,” வாழ்வில் மேலே போகும் பொழுது லிஃப்டில் போவது போல் வேகமாக மேலே போகவேண்டும். கீழே வரும் பொழுது மெதுவாக படிகளில் இறங்குவது போல் இறங்கி வரவேண்டும்”

அப்பார்ட்மெண்ட் உள்ளே அவர்கள் நுழைந்த பொழுது வீடு தாறுமாறாக கிடந்தது. ஃபர்னிச்சர்கள் கவிழ்ந்து கிடந்தன. உடைமைகள் சிதறிக் கிடந்தன.

ரூபாவின் தோழி ஒரு சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்திருந்தன.

“மேடம், இது ரியா. ரூபாவின் தோழி. முதல் முதலாய் ரூபா காணாமல் போனதை தெரியப்படுத்தியவர்”

ரியாவின் அருகில் அமர்ந்த லாஃப்ரா, ரியாவிடம்,”ஏதாவது சந்தேகத்துக்கு இடமானது மாதிரி சப்தம் அல்லது வேறு ஏதாவதையாவது பார்த்தாயா?” என சாந்தமாக வினவினாள்.

சித்தரிப்புப் படம்

இதே லாஃப்ரா, கடினப்பட்ட குற்றவாளிகளை விசாரணை செய்யும்பொழுது எவ்வளவு கடினமாக பேசக் கூடியவள் என்று இன்ஸ்பெக்டர் அபிக்கு தான் தெரியும்.

ரியா கண்களை துடைத்தவாறே தலையாட்டிய வண்ணம் பேசினாள், ”இல்லை மேடம். நான் நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்தேன். திரும்பி வந்து பார்த்த பொழுது, வீடு இவ்வாறு கிடந்தது. ரூபாவையும் காணோம்”

”ரூபா காணவில்லை என்று எப்படி தெரியும் உனக்கு”

“நான் சென்ற ‘ரேவ்’ பார்ட்டிக்கு ரூபாவும் வருவதாய் இருந்தது மேடம். கடைசி நேரத்தில் வரவில்லை என்று கூறிவிட்டாள். நான் வந்தவுடன் எங்கள் இருவருக்கும் வேறு ஒரு புரொக்ராம் இருந்தது”

’ரேவ் பார்ட்டி’ ‘புரொக்ராம்’ அடிக்கோடிட்டுக் கொண்டு இன்ஸ்பெக்டர் அபியை பார்த்தாள் லாஃப்ரா.

லாஃப்ராவும் அபியும் ஒரே அலைதளத்தில் சிந்திக்க கூடியவர்கள். இருவர் கண்களும் ஒரு விநாடி சந்தித்து திரும்பின.

ரியா மூக்கை உறிந்து கொண்டே பேசிய விதம், இருவருக்கும் ஒன்றை உறுதி செய்தது. ரியா ஒரு ட்ரக் அடிக்ட். போதை பொருள் உபயோகிக்கிறாள். ரியா உபயோகிக்கிறாள் என்றால் ரூபாவும்…..

லாஃப்ராவுக்கு மேலே யோசிக்கவே பயமாக இருந்தது.

நார்க்கோடிக்ஸ் டீமையும் சேர்க்க வேண்டி இருக்குமோ.

லாஃப்ரா சோஃபாவில் இருந்து எழுந்தாள், ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அவளின் பழக்கப்பட்ட கண்கள் தேடின.

“யாரும் எதையும் தொடவில்லையே, அபி” என்ற லாஃப்ராவின் கண்களில் திறந்திருந்த ஜன்னல் வழியாக வந்த காற்றில் படபடத்த அந்த துண்டு காகிதம் கண்ணில் பட்டது.

”பத்து கோடி. இடம் பின்னால் தெரிவிப்போம்”

‘பத்து கோடியா?ஒரு கணம் அதிர்ந்து போன லாஃப்ரா அபியை அழைத்து அந்த குறிப்பை காண்பித்தாள்.

”இதை ஆராய வேண்டும்” கிளவுஸ் போட்ட கையால் அந்த துண்டு காகிதம் எடுத்தாள் லாஃப்ரா.

“ஃபோரன்சிக் டீமை அவிழ்த்துவிடுங்கள்” என்ற லாஃப்ராவின் ஆணை பெற்ற டீம் தன் வேலையை ஆரம்பித்தது.

லாஃப்ரா அறிந்திருந்தாள், நேரம் பறக்கிறதென்று. இன்ஸ்பெக்டர் அபியை தனியே அழைத்த லாஃப்ரா அபியிடம் சொன்னாள்,”ஒவ்வொரு விநாடியும் விலை மதிப்பற்றது ரூபாவை மீண்டும் உயிருடன் பார்க்கவேண்டுமென்றால்”

தொடரும்

அன்புடன்

மீரா போனோ

(எஃப்.எம்.பொனவெஞ்சர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan

பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராம... மேலும் பார்க்க

`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சிவகாமியின் சபதமும் ராமாயணமும் - 60ஸ் பெண்ணின் பாட்காஸ்ட் அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரியின் பார்வையில் `அன்பே சிவம்’ ! | My Vikatan

நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது. விபத... மேலும் பார்க்க

'5 வகையான நண்பர்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்' - உங்க நண்பர் இதில் எந்த ரகம்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`அம்மாவின் வாரிசு’ - மகளின் நெகிழ்ச்சி தருணம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க