மிஸ்பண்ணிடாதீங்க... என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
கடன் தொல்லையால் கணவர் தற்கொலை! மனைவி, குழந்தைகளுக்கு சிகிச்சை!
பிகாரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த நிலையில், குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிகாரின் பாங்கா மாவட்டத்தில் கன்ஹையா மஹாதோ என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக, சில வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தமும், தொடர் நிதி நெருக்கடியும் மஹோதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இதற்கிடையே, தங்களால் கடன்பட்ட வாழ்க்கையை வாழ இயலாது என்று கூறிய, மஹோதாவும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களுடைய 3 குழந்தைகளையும் தற்கொலைக்கு உள்ளாக்க முற்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (நவ. 16) அதிகாலையில் அவர்கள் 5 பேரும் விஷமருந்தியுள்ளனர். இதனிடையே, மஹோதாவின் மகள், தங்களின் உறவினர் ஒருவருக்கு மொபைல் போனில் அனைத்து விவரங்களையும் அதிகாலையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மஹோதாவின் வீட்டை அடைந்த உறவினர், அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மஹோதா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தர். மேலும், அவரது மனைவியும் 3 குழந்தைகளும் தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].