செய்திகள் :

உ.பி.யில் சாலை விபத்து: புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலி!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் கார்-டெம்போ மீது மோதிய விபத்தில் ஜார்க்கண்டில் இருந்து திரும்பிய புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலியாகினர்.

டேராடூன்-நைனிடால் நெடுஞ்சாலையில் தம்பூர் தீயணைப்பு நிலையம் அருகே அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. தம்பூர் பகுதியில் அமைந்துள்ள மணமகனின் வீட்டுக்குச் செல்வதற்காகப் புதுமண தம்பதி உள்பட அவரது குடும்பத்தினர் டெம்போவில் பயணித்துள்ளனர்.

அப்போது டெம்போவை முந்திச் செல்ல முயன்ற கார் பின்னால் இருந்த மோதியதில் அருகிலிருந்த பள்ளம் ஒன்றில் கார், டெம்போ இரண்டும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி, ஓட்டுநர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரிலி பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அடர் பனியால் தெளிவற்ற வானிலையே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கங்குவா நடிகையின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கதாநாயகியா... மேலும் பார்க்க

முந்தைய அரசுகள் வாக்குவங்கி அரசியலைப் பின்பற்றின: மோடி குற்றச்சாட்டு!

புது தில்லி: முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஹெ.டி தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கூறியது, தனது அரச... மேலும் பார்க்க

டேராடூன் கோர விபத்து: அந்தக் கடைசி நொடியில் என்ன நேர்ந்தது?

டேராடூனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட ஒரு பயங்கர விபத்து, காவல்துறையினரை மட்டுமல்லாமல், நாட்டையே உலுக்கியிருக்கிறது.வேகமாக இயக்கப்பட்ட ஒரு கார், 3 பெண்கள் உள்பட 6 இளைஞர்களின் உயிரைப் பறித்துச் செ... மேலும் பார்க்க

காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் கணவர் தற்கொலை! மனைவி, குழந்தைகளுக்கு சிகிச்சை!

பிகாரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த நிலையில், குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிகாரின் பாங்கா மாவட்டத்தில் கன்ஹையா மஹாதோ என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(சனிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.தீ பற்றியதையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வ... மேலும் பார்க்க