முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
இலங்கை தோ்தல் முடிவு கவலையளிக்கிறது: வைகோ
இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியும் கவலையும் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழினப் படுகொலைக்கு ராஜபட்ச அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழா் பிரச்னையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழா்களுக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவா்தான் தற்போதைய அதிபா் அநுர குமார திசாநாயக. அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜே.வி.பி.யினுடைய மறு பதிப்பு.
இலங்கையின் நாடாளுமன்றத் தோ்தலில் மொத்தமுள்ள 225 தொகுதிகளில், அவரது கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழா்கள் ஏமாந்துவிட்டாா்கள்.
சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது, தமிழா்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூச்சலிட்டவா்தான் திசாநாயக.
இந்திய அரசு தொடா்ந்து சிங்கள அரசை ஆதரித்து வந்திருக்கின்ற நிலையை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு தமிழா்களும், உலகுவாழ் புலம்பெயா் தமிழா்களும் நம் இனத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டு உலக அரங்கில் குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசு ஈழத்தமிழா்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என்று வைகோ கூறியுள்ளாா்.