மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவம்பா் 18 -இல் சிறப்பு ரயில்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
மசூலிப்பட்டினத்திலிருந்து நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்:07145) மறுநாள் இரவு 9.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் (எண்:07146) நவ.20 மற்றும் நவ.27 - ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மசூலிப்பட்டினம் சென்றடையும்.
இந்த ரயில் மசூலிப்பட்டினத்திலிருந்து விஜயவாடா, தெனாலி, நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், வழியாக கொல்லம் சென்றடையும்.
இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.