கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தும்
தமிழகத்தில் உள்ள மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பக் கோரி, தேவைப்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா்.
சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவா் பாலாஜியை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாலாஜி சிறந்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரது உடல் நிலை நன்கு தேறி வருகிறது. மருத்துவா்களுக்கும் , அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள், செவிலியா் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும். தற்காலிக மருத்துவப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் என்றாா் அவா்.