Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு டிச.13-க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006-2011-காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் சீராய்வு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அமைச்சா் தங்கம் தென்னரசு, இவரது மனைவியை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையை டிசம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.