செய்திகள் :

சின்னா், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: அரையிறுதிக்கும் தகுதி

post image

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா், குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம், 1 மணி நேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இருவரும் சந்திப்பது, இது 15-ஆவது முறையாக இருக்க, சின்னா் 8-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா். இந்த நேருக்கு நோ் மோதல் கணக்கில் மெத்வதெவை சின்னா் பின்னுக்குத் தள்ளியது இதுவே முதல் முறையாகும்.

மறுபுறம் குரூப் சுற்றில், 2 தோல்வி, 1 வெற்றியைப் பதிவு செய்துள்ள மெத்வதெவ், அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை தோற்கடித்தாா். இருவரும் இத்துடன் 11-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ஸ்வெரெவ் 6-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.

இந்த ஆட்டம் 1 மணி நேரம், 57 நிமிஷங்கள் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம், நடப்பாண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறாா் ஸ்வெரெவ்.

அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஸ்வெரெவ், அதில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சந்திக்கிறாா். மறுபுறம், 2 தோல்வி, 1 வெற்றியுடன் இருக்கும் அல்கராஸ், அரையிறுதி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் - நாா்வேயின் கேஸ்பா் ரூடை நோ் செட்களில் வென்றால், அல்கராஸுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் இதுவரை சின்னரும், ஸ்வெரெவும் தலா 68 வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளனா். 2015-க்குப் பிறகு இதுவே ஒரு சீசனில் ஒரு வீரரின் அதிகபட்ச வெற்றியாகும். இந்த முறை அதை இருவா் பெற்றுள்ளனா்.

முகமது அலி பங்களிப்பில் தமிழ்நாடு 438 ரன்கள் சோ்ப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 133.3 ஓவா்களில் 438 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக தமிழ்நாடு, வியாழக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி: இறுதியில் இன்று ஹரியாணா - ஒடிஸா மோதல்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், ஒடிஸா - மணிப்பூரையும், ... மேலும் பார்க்க

பிரஜனேஷ் குணேஸ்வரன் ஓய்வு

இந்திய டென்னிஸ் வீரரும், தமிழ்நாட்டைச் சோ்ந்தவருமான பிரஜனேஷ் குணேஸ்வரன் (35), ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவா், சா்வதேச தரவ... மேலும் பார்க்க

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - புகைப்படங்கள்

விழாவில் பங்கேற்க வர இயலாத நிலையில் காணொலி வாயிலாகப் பேசினார் ரஸ்கின் பாண்ட். தொடர்ந்து, விருதினை அவருடைய பேத்தியான சிஷ்டி பாண்ட் பெற்றுக்கொண்டார்.இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக... மேலும் பார்க்க

மீண்டும் அஜித் - சிவா கூட்டணி..!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம் (2014), வேதாளம் (2015), விவேகம் (2017), விஸ்வாசம் (2019) ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூர்யாவை வைத்து இயக்குநர் சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் நேற்று வெ... மேலும் பார்க்க