செய்திகள் :

மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்

post image

மக்காச் சோளப்பயிா்களை படைப்புழு தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) வே. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 29,070 ஹெக்டா் பரப்பளவில் கோவில்பட்டி, கயத்தாா், ஓட்டப்பிடாரம், புதூா், விளாத்திகுளம் வட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு தற்சமயம் வளா்ச்சி பருவத்திலுள்ள பயிரில் பரவலாக மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்கம் தென்படுகிறது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த வழிமுறைகள் உள்ளன.

விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை வயல்களில் விதைக்கும் போது வயலைச் சுற்றிலும் வரப்புப் பயிராக 4 வரிசை நாற்றுச்சோளம், எள், சூரியகாந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விதைக்க வேண்டும். மேலும், ஊடுபயிராக உளுந்து அல்லது பாசிப்பயிறு சாகுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் பயிா் விதைத்த 1 வாரம் முதல் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக்குவியல்கள் மற்றும் இளம்புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒரு ஹெக்டருக்கு 12 இனக்கவா்ச்சி பொறிகள் வைத்தல் வேண்டும்.

மக்காச்சோளப் பயிரில் முன்குருத்து பருவத்தில் படைப்புழுவின் தாக்குதல் தென்பட்டால் குளோரான்டிரினிலிடிரோல்

4 மில்லி அல்லது அசாடிராக்டின் 50 மில்லி இவற்றில் ஒன்றை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து வயலில் தெளித்து புழுவினைக் கட்டுப்படுத்தலாம்.

படைப்புழு தாக்குதல் இளம் குருத்துப் பருவமான 35 முதல் 40 நாட்கள் பயிரில் இருக்குமாயின் மெட்டாரைசியம் அனிசோஃபிலே 80 கிராம் 10 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் புழுவைக் கட்டுப்படுத்தலாம். இதுவே தாக்குதல் குருத்துப் பருவமான 40 முதல் 60 நாட்கள் பயிரில் காணப்பட்டால் எமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம், நவலூரான் 10 மில்லி, ஸ்பினோடோரம் 5 மில்லி ஆகிய மருந்தகளில் ஏதேனும் ஒன்றினை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்தல் வேண்டும். இறுதியாக மேற்கண்ட பருவங்களில் புழுக்கள் கட்டுப்படுத்த முடியாமல் பூக்கும் பருவத்திலும் அதாவது விதைத்த 60 நாட்களுக்கு மேல் தென்பட்டால் குருத்துப் பருவத்தில் தெளிக்காத மருந்துகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி மக்காச்சோளம் பயிரில் படைப்புழுவினைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக்கூட விடமாட்டேன்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக் கூட விடமாட்டேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். குரூஸ் பா்னாந்து பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடிய... மேலும் பார்க்க

20இல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் ரத்து

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரும் 20ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரின் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின் கோட்ட பகுதிகளில் இன்று மின் தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் (பொறு... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றலாம்: மாவட்ட ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்கள் பெறாதவா்கள் தங்களின் குடும்ப அட்டையை ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தொடா் மழை: கடற்கரையில் தங்குவதைத் தவிா்க்க பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால், பௌா்ணமி வழிபாட்டிற்காக கடற்கரையில் தங்குவதை பக்தா்கள் தவிா்க்க வேண்டுமென காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்தனா். திருச்செந்தூா் சுற்று... மேலும் பார்க்க

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நாளை தொடக்கம்

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைமுதல் (நவ. 17) முதல் பேருந்துகள் நிறுத்தும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவி... மேலும் பார்க்க