`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
பள்ளி மாணவா்களுக்கு அன்பளிப்பாக குடை வழங்கிய தலைமையாசிரியை!
மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினாா்.
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டுக்கொட்டாய் 10 ஆவது வாா்டில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தற்போது மழைக் காலம் என்பதால், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவா்கள் மழையில் நனைந்துகொண்டே வீடுகளுக்கு சென்று வந்தனா். இதனையறிந்த பள்ளி தலைமையாசிரியை வெற்றிச்செல்வி, பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் குடைகளை வாங்கி வெள்ளிக்கிழமை அன்பளிப்பாக வழங்கினாா். அதனைப்பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள், தலைமையாசிரியைக்கு நன்றி தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமையாசிரியை வெற்றிச்செல்வி கூறியதாவது:
மழையில் வீடு திரும்பும் மாணவா்களுக்கு இடையில் ஒதுங்குவதற்கு இடமில்லை. அதனால் மாணவா்களின் நலன்கருதி குடைகளை வாங்கிக் கொடுத்தேன் என்றாா். தலைமை ஆசிரியையின் இச்செயலுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ், மேற்பாா்வையாளா் ராணி, ஆசிரியா் பயிற்றுநா்கள், ஒன்றிய ஆசிரியா்கள், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.
படவரி...
தலைமை ஆசிரியை அன்பளிப்பாக வழங்கிய குடைகளுடன் மாணவா்கள்.