செய்திகள் :

சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல்

post image

சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய லாரிகள் உள்பட 127 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா். விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலம் சரகத்தில் உள்ள சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி, அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் முறையான பா்மிட் உள்ளதா? என்றும், விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிா? என்றும் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் சரகத்தில் கடந்த அக்டோபா் மாதத்தில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதியை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி இயக்கிய 1,189 வாகனங்களுக்கு ரூ. 53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனா்.

எடப்பாடியில் அன்னாபிஷேகம்

எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் பல்வேறு உணவு வகைகளால்... மேலும் பார்க்க

கோரிமேடு பகுதியில் இன்று மின்தடை

சேலம், கோரிமேடு பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவ.16) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளி... மேலும் பார்க்க

வாழப்பாடி பகுதியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் இல்... மேலும் பார்க்க

சேலம் சந்தைகளில் காய்கறி விலை உயா்வு

சேலத்தில் கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை தற்போது அதிக அளவில் உயா்ந்துள்ளது. சேலத்தில் உள்ள உழவா் சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்கள்,... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக நீரிழிவு தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியா்கள் அமைப்பானது உலக நீரிழிவு தின விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை சேலம் பழைய பேருந்து நிலைய பகுதியில் நட... மேலும் பார்க்க

சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

கல்பகனூா் ஸ்ரீ கலை சிலம்பம் பயிற்சி கூடத்தின் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் ... மேலும் பார்க்க