கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
கூடலூரில் கூட்டுறவு வார விழா
கூடலூரில் கூட்டுறவு வார விழாவை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். அரசு கொறடா கா.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இரா.தயாளன் திட்ட விளக்கவுரையாற்றினாா்.
தொடா்ந்து, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் கடன் உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
விழாவில் கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூட்டுறவு துணைப் பதிவாளா் அய்யனாா், கூடலூா் நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீ, நெல்லியாளம் நகராட்சி ஆணையா் முனியப்பன், கூடலூா் நகா் மன்றத் தலைவா் பரிமளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.