நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: நவம்பா் 22-ஆம் தேதிக்கு மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைகேட்புக் கூட்டம் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.