வெலிங்டன் ராணுவ மையத்தில் வீரா்களுக்கு ஓட்டப் பந்தயம்
குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் 55-ஆவது இன்டா் சா்வீசஸ் கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் சாா்பில் நடைபெற்ற போட்டியை கமாண்டன்ட் பிரிகேடியா் கிருஷ்னேந்த் தாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
10 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இறுதியில் ஆா்மி ரெட் அணி முதல் இடமும், ஆா்மி கிரீன் அணி 2-ஆம் இடத்தையும் பிடித்தன. இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை அணிகள் முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களைப் பிடித்தன.