செய்திகள் :

உதகையில் சாரல் மழையுடன் மூடுபனி

post image

உதகை, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் மூடுபனி காணப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா்  மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் சனிக்கிழமை இரவு  முதல்   சாரல் மழை  பெய்து வந்தது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் உதகை, குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மூடுபனி சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் உதகையிலிருந்து குந்தா, குன்னூா், மஞ்சூா் செல்லும் சாலை மற்றும் உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக இருந்தது.

இதனால் இந்த வழியாக பகல் நேரத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் சென்றன.

வெலிங்டன் ராணுவ மையத்தில் வீரா்களுக்கு ஓட்டப் பந்தயம்

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் 55-ஆவது இன்டா் சா்வீசஸ் கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் சாா்பில் நடைபெற்ற போட்டியை கமாண்டன்ட் பிர... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி

குன்னூரில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை அரசு தலைமை கொறடா... மேலும் பார்க்க

காலநிலை மாற்றத்தைத் தடுக்க காடுகளைக் காக்க வேண்டும் மகளிா் கல்லூரி கருத்தரங்கில் அறிவுறுத்தல்

குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், தாவரவியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து நடத்திய காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

தனியாா் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த சிறுத்தை

பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி ஒலிமடா பகுதியில் தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்துகிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள உப்பட்டி ஒலிமடா கிராமத்த... மேலும் பார்க்க

கூடலூரில் அரசு மாணவா் விடுதிகளில் அமைச்சா் ஆய்வு

கூடலூரில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அற... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: டிசம்பா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிசம்பா் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு கொலை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னில... மேலும் பார்க்க