Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் ...
Shobitha Shivanna: சடலமாக மீட்கப்பட்ட கன்னட நடிகை; தற்கொலையா... கொலையா? - விசாரணையில் காவல்துறை!
பிரபல கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (30). இவர் கன்னடத்தில் Eradondla Mooru, ATM: Attempt to Murder, Vandana போன்ற பல்வேறு படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர். இது தவிர காலிபட்டா, மங்கள கௌரி உள்ளிட்ட சுமார் 12 தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் கோண்டாபூரில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இது தொடரபாக வெளியான செய்தியில், நடிகை ஷோபிதா சிவன்னா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை நடிகை ஷோபிதா சிவன்னாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா... அல்லது இது கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நடிகை ஷோபிதா சிவன்னா, சினிமா வாழ்க்கையை விட்டு விலகியிருந்தார். அதன் பிறகு அண்மைக்காலமாகவே சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது, அவரின் மர்ம மரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் எனக் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. நடிகை ஷோபிதா சிவன்னா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர். ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தவர். அவரது திடீர் மறைவு கன்னடத் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.