தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
தூத்துக்குடி: சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 6 நாள்களுக்குப் பின்னர் தூத்துக்குடி மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளைகுடா, தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனவே, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த நவ. 26ஆம் தேதிமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை உத்தரவிட்டது.
அதன்படி கடலுக்குச் செல்லாததால், மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது சூறாவளிக் காற்று எச்சரிக்கை இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 6 நாள்களுக்குப் பின்னர் கடலுக்குச் செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.