கர்நாடகத்தில் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 3 பெண்கள் பலி
கர்நாடகத்தில் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 3 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், சிரா வட்டத்தில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் திங்கள்கிழமை அதிகாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 பயணிகளுடன் கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து அதிகாலை 4.30 மணியளவில் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியானவர்கள் ஷெபாலி சிங், உர்வி மற்றும் பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.